Welcome to Tamil Nursing
This video explained about Ectopic pregnancy def, risk factors , etiology – (Part – I)
கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பம் தரித்தலை இடம் மாறியகர்ப்பம் எனக்கூறலாம்.
இந்நிலை நூற்றில் ஒரு (1:100) கர்ப்பத்தில் உண்டாகலாம்.
அதிகமாக இந்நிலை கர்ப்பபையின் குழாயில் தான் உண்டாகின்றது.
இடம்மாறிய கர்ப்ப நிலையினால் நோயாளியின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.
2. இடம்மாறிய கர்ப்பம் எற்படக் காரணங்கள் என்ன?
சாதாரணமாக கருவுற்ற முட்டை ஆறு அல்லது ஏழு நாட்கனிளில் சூலகத்திலிருந்து கர்ப்பப்பையின் குழாயினூடாக கர்ப்பபையை சென்றடையும்.
இடம்மாறிய கர்ப்ப நிலையில் கருவுற்ற முட்டை கர்ப்பப்பைக் குழாயில் தங்கி விடுவதால் கர்ப்பப்பையைச் சென்றடைவதில்லை.
இந்நிலையை நேரந்தாளாமல் கண்டு பிடித்து சிகிட்சை அளிக்கா விட்டால் கர்ப்பப்பைக்குழாய் வெடித்து உடலுக்குள் இரத்தக்கசிவு எற்பட்டு நோயாளி மயக்கமடையலாம். சிலவேளைகளில் உயிகுக்கும் ஆபத்து ஏற்படலாம். கர்ப்பைக்கு வெளியே கர்ப்பப்பைக் குழாயைத்தவிர வேறு இடங்களிலும் கர்ப்பம் உண்டாகலாம். ஆனால் இடம் மாறிய கர்ப்பம் சரியான வனர்ச்சியை அடைவதில்லை.
பெரும்பாலான இடம்மாறிய கர்ப்பநிலைகள் ஏற்படக் காரணங்கள் என்னவென்று தெரிவதில்லை.
பாலியல் உறவினூடாகப் பரவும் தொற்றுதோய்கள் () கர்ப்பப்பைக் குழாய் கலைப்பாதித்து குழாய்களளில் அடைப்பை ஏற்படுத்தியிருக்கலாம் அல்லது குழாய்கள் சுருங்கியுக்கலாம்.
